அநுமன் கடிக்கு ஏறும் படிக்கட்டுகள். பாதாளத்திற்கு அஹி, மஹி ராவணர்களால் தூக்கிச் செல்லப்பட்ட ராம, லக்ஷ்மணர்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்தது அநுமன் என்று சொல்கின்றனர். இங்கே அநுமன் பிரம்மாண்டமாய்க் காணப்படுகிறார். ஏணி வைத்து ஏறித் தான் அபிஷேஹ ஆராதனைகள்.
அநுமனின் முழு உருவத்தையும் படம் எடுக்க முடியவில்லை. இரு பாதிகளாக எடுத்தேன்.
கொஞ்சம் தள்ளி நின்று எடுத்துப் பார்த்தும் முழு உருவமும் வரவில்லை.
எங்கு சென்றாலும் ராம, லக்ஷ்மணர்களைப் பார்க்காமல் வர முடியாது.
இவருக்கும் இங்கே இடம் உண்டாம்.
அநுமனின் மகன் எனச் சொல்லப்படும் மகரத்வஜன். இலங்கையில் சீதையைச் சந்திக்கச் சென்ற அநுமன் வாலில் தீ வைக்க அதை அணைக்க அநுமன் கடல் நீரில் வாலை நனைக்கிறார். அப்போது ஏற்பட்ட வியர்வை கடல் நீரில் விழுந்தது. அங்கே மீன் வடிவில் நீந்திக் கொண்டிருந்த சுவர்ச்சலா தேவி என்னும் நங்கை அந்த வியர்வையை விழுங்க அதன் காரணமாய்க் கருவுற்று ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் எனவும் அது தான் மகரத்வஜன் என்றும் சொல்கின்றனர். இந்த மகரத்வஜனை அஹி, மஹி ராவணர்கள் மயக்கி வைத்திருக்க மகனின் மயக்கத்தையும் போக்கி, அஹி, மஹி ராவணர்களையும் கொன்று பாதாளத்திலிருந்து ராம, லக்ஷ்மணர்களை மீட்டு வருகிறார் அநுமன். பாதாள உலகிற்குத் தன் மகனை ஆட்சி செய்யச் சொல்கிறார்.
மறுமொழிகள்
0 comments to "நைமிசாரண்யத்தின் சில காட்சிகள் --தொடர்ச்சி!"
Post a Comment