Tuesday, November 13, 2018

1910ம் ஆண்டு சாதி அமைப்பின் கொடுமை

3 மறுமொழிகள்

நன்றி: முனைவர்.சந்திரபோஸ்Saturday, September 29, 2018

பிட் நோட்டீஸ்

0 மறுமொழிகள்

அண்மையில் பிட் நோட்டீஸ் ஒன்று பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்தது. அதன் வாசகம் பின்வருமாறு:

உசிலம்பட்டி கெளடர் டூரிங் டாக்கீஸில்
11-8-37 புதன்கிழமை முதல்
மிஸ் K.T. ருக்மணி ராம்பியாரி அங்கமுத்து
முதலியோர் நடித்த

ஸ்ரீ சாமுண்டீஸ்வரி
அல்லது
நவராத்திரியின் மகிமை

என்னும் தமிழ் பேசும்படும் படம் கண்பிக்கப்படும்
(எழுத்துப் பிழைகள் என்னுடையதல்ல. படம் பார்க்கவும்)

கனதனவான்கள் அனைவரும் தவராது பார்த்து
ஆனந்தமடையும்படி கேட்டுக் கொள்கிறேம்.

டிக்கட் விபரம்
சேர் 0-4-0 காலரி 0-2-0 தரை 0-1-0
(அணா 4 அணா 25 பைசாவுக்கு இணை)

R.V.G. Proprietor. K.S.V. Manager
_______________________________________________
மதுரைவீரன் பிரஸ், உசிலம்பட்டி: -- 37.(37 தொலைபேசி எண்)

இதன் முன்புறத்தில் வண்ணத்தில் நடிகை படத்துடன் காணப்பட்ட வாசகங்கள். இதில் குறிப்பிடப்படும் "றம்பியார்" நம் எம்.என். நம்பியார் அவர்களா என்று தெரியவில்லை.
சந்திரா பிக்சர்ஸ் தயாரித்தது. டைரக்டர் துருபத்றாய் என்றுள்ளது.
படங்களுக்கான ரீல்களை அனுப்புகையில், வண்ணத்தில் அடிக்கப்பட்ட நோட்டீஸ்களும் கட்டணம் செலுத்தி பெறப்படும். உள்ளே உள்ள வெள்ளை வெற்றிடத்தில், அந்த அந்த தியேட்டர் குறித்து அடித்து விநியோகம் செய்வார்கள் என்று இந்த நோட்டீஸைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என் சிறிய தந்தை கூறினார்.

கூகுளில் இது குறித்துத் தேடியபோது முழுமையானப் பதிவாக இல்லாமல், திரைப்பட தலைப்பு மட்டும் இருந்தது. வேறு தகவல்கள் இல்லை.

பெ.சந்திர போஸ்
சென்னை

------------------------------------------------------------------

///இதில் குறிப்பிடப்படும் "றம்பியார்" நம் எம்.என். நம்பியார் அவர்களா என்று தெரியவில்லை. ///
ராம்பியாரி   என்பவர்தான்  அந்த அம்மையார்.
அக்கால நடிகை எனத் தெரிகிறது.
_________________________________
படம் குறித்த தேடலில் எனக்குக் கிடைத்த செய்தி (http://www.gomolo.com/samundeeswari-movie/8696)
Samundeeswari (1937 - Tamil)

About Samundeeswari
Director: Drupad Roy

Main Cast:
M. S. Raghavan, K. T. Rukmini, A. Kodandapani, Rampyari...

Release:
1937
Source:
https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/The-making-of-lsquoMenaka/article16146081.ece

Rashid Ashraf
https://www.flickr.com/photos/rashid_ashraf/42062981362
Rampyari (Actress of 20s & 30s)

முனைவர் தேமொழி.


-----------------------------------------------------------------------------------------------------------------


அன்றைய காலத்திய திரைப்படங்களில் நாயகிகள் எவ்வாறு சித்தரிக்கபப்ட்டார்கள் என்று காட்டுகிறது.  இதோ நீங்கள் குறிப்பிடும் படம் .


பெ.சந்திர போஸ்
சென்னைSaturday, September 15, 2018

1960 விளம்பரங்கள்

0 மறுமொழிகள்காஞ்சி மணிமொழியார் மணிவிழா மலர் (17-5-1960) 
இல் கிடைத்த  விளம்பரங்கள்.

தேமொழி

Wednesday, February 14, 2018

எண்ணாகப் பிணைப்பு

0 மறுமொழிகள்


Sunday, October 16, 2016

இராமாயணம் / கீமாயணம்

1 மறுமொழிகள்நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.

இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.
“சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்

செந்தாமரை ஓடையிலே முதலைகள்

தமிழகத்திலே ஆரியர்கள்.................

ஆடு மாடு  மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்

இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

இதை இப்படியே விட்டு விட்டால்

நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு   ஆகிவிடும்.

இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”

என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.


திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.  பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான்  ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.
     இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர்  ,  கடந்த 2014ஆம் ஆண்டு , தனது   87ஆவது வயதில்   இயற்கை எய்தினார்.

-சிங்காநெஞ்சன்


Thursday, September 8, 2016

வ.உ.சி. திருமண அழைப்பிதழ்

3 மறுமொழிகள்

வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களுக்கும் மீனாட்சியம்மாளுக்கும் நடந்த திருமண அழைப்பிதழ்.

இதனை நம் சேகரத்திற்காக வழங்கிய நண்பர். டாக்டர். சந்திரபோஸ் அவர்களுக்கு நன்றி.
-சுபா


Sunday, May 1, 2016

வாழவந்தம்மன் கோவில்

1 மறுமொழிகள்
-உதயன்--


வாழவந்தம்மன் கோவில், அருப்புக்கோட்டையில் உள்ளது. பொதுவாக வேண்டுதலுக்கு உருவ அமைப்புக் கொண்ட சுடுமண் சிற்பங்கள் செய்து வைப்பர்கள், இந்த கோவிலில் கருங்கல்லிலேயே செய்து வைத்துள்ளனர்.
குழந்தை உண்டாகி தங்காமல் இருப்பவர்கள், அல்லது குழந்தை பிறந்து சில வருடங்களில் இறப்பது அதற்க்காக இது போல் கற்சிற்பங்கள் செய்யலாம். இது என் கற்பனையே.

விபரம் அறிந்தவர்கள் கூறவும்.


 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES