வியாசர் இருந்ததாய்ச் சொல்லப்படும் வியாச கடியில் அறிவிப்புப் பலகை.
பாரதம் எழுத வியாசருக்கு உதவிய பிள்ளையார். இதே போல் பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள மானா என்னும் கிராமத்திலும் விநாயகர் குகை என்று உள்ளது.
சூத பெளராணிகர் பாரதம், பாகவதம் போன்றவற்றை உபந்நியாசம் நிகழ்த்திய இடம். சூத கடி என அழைக்கப்படுகிறது. வியாசரின் மகனான சுக முனிவருக்கு வியாசர் இவற்றை போதித்ததாகவும், அவரிடமிருந்து மற்றவர்கள் கற்று இங்கே ரிஷி, முனிவர்களுக்கு உபந்நியாசம் செய்ததாகவும் ஐதீகம்.
ஶ்ரீமத் பாகவதம் இங்கே தான் முதன் முதல் உபந்நியாசமாகச் சொல்லப்பட்டதாக அறிகிறோம்.
உலக க்ஷேமத்துக்காக ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்னும் மந்திர ஜபம் செய்யும்படி பொதுமக்களை வேண்டும் அறிவிப்பு.
ஸ்வயாம்புவ மனு முதன் முதல் தோன்றிய இடமாகக் கருதப்படுகிறது.
மறுமொழிகள்
0 comments to "நைமிசாரண்யத்தில் சில காட்சிகள் --- தொடர்ச்சி!"
Post a Comment