பொங்கல் 2012
அட...அதுக்குள்ள ஒரு வருடமாகி விட்டது ..
( டிசம்பர் 20 லிருந்தே வீட்டைப் புரட்டிப்பூடும் வேலைகள் தொடங்கிவிடும் ...கிறிஸ்துமஸ் ( 7அடி உயர மரம் நடுக்கூடத்துக்கு வந்துவிடும்) , புத்தாண்டுக் கொண்டாட்டங்க்கள் , பொங்கல்திருவிழா என............)
கோலத்துடன் துவங்கும் நாள்:(12மணிக்கு ஆரம்பித்து ....3 மணிக்கு முடித்தது ...)
ஆரம்பம் ... ஆற்றுமணல் பரப்பி, பொங்கக்கட்டி வைத்து, மேலே பொங்கப்பானை ஏற்றி முடிக்க ஒரு அரைமணி நேரம் ஆக்கிவிட்டார்கள் ... 'சும்மா தூக்கி வைக்கிறதை ஏன் இவ்ளோ பெரிய வேலைமாதிரி செய்றாங்க ??? " அதிகாலையிலேயே நம் பொறுமைக்கு சோதனை...ஆனால் இதன் ரகசியம் அப்புறமாத்தான் தெரிஞ்சது.
கற்பூரம் வைத்து பற்ற வைத்தாகிவிட்டது.
பனையோலை மூலம் இனிய தொடக்கம்.
பொங்கல்
பனங்கிழங்கு ...காய்கறிகளின் ஒரு பகுதி .
பனங்கிழங்கு : (மேக் அப் இல்லாமல்)
பருத்திமார், பனையோலை,பொங்கக் கட்டி அடுப்பு ..
காய்கறிகள் ...தயாராகிக் கொண்டிருக்கிறது (உபயம் .. நான் )
பொங்கக் குழம்பு.......
ஒரு சிறுகுறிப்பு : இந்தக் குழம்பின் சுவைக்காக இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டும் .. இடையில் எவ்ளோதான் ஆசைப்பட்டு அப்படியே தலைகீழே நின்னாலும் ’அந்த ‘ சுவைபோல அமையவே அமையாது . அளவு , அடுப்பு , பாத்திரங்கள்(குக்கர்) எல்லாம் மாறுவதால் இருக்கலாம்.... ( ஒருவேளை பொங்கலுக்கான காய்கறிகள் வாங்குவதிலிருந்து , வெட்டிக் கொடுப்பது வரையிலும் ‘ நான்’ செய்வதால் அந்த சுவை அமைந்திருக்க வாய்ப்புண்டு என்பதை தன்னடக்கத்துடன் இங்கே சொல்லாமலேயே விட்டுவிடுகிறேன் )
150 லிட்ட கொள்ளளவு உருளியில் ...தொடர்ந்து பனையோலை அடுப்பில்...(புகையால் பக்கத்திலிருந்து எதிர்ப்பெல்லாம் வரும் ) சூடாகிக் கொண்டே இருக்கும் . தெரிஞ்ச இடத்துக்கெல்லாம் ஆர்டரின் பேரில் பார்சல் சர்வீஸ் நடந்துக்கிட்டே இருக்கும்.
இரண்டாம் நாளில் காய்கறிகள் எல்லாம் சேர்ந்து உருகி ஒரு அமுதமாகிவிடும் :)
படங்களும் விளக்கமும்: துரை.ந.உ
மறுமொழிகள்
0 comments to "எங்க வூட்டுப் பொங்கல்...!"
Post a Comment