Sunday, November 6, 2011

காளையார் கோயில் - மருது சகோதரர்கள்

0 மறுமொழிகள்


வணக்கம்.

கடந்த 30/10/2011 அன்று காளையார் கோயில் சென்று வழிபாடும் பேறு கிடைக்கப் பெற்றேன். அன்று மாமன்னர் மருது சகோதரர்களை வணங்கிய போது ஐயா ‘இ‘னா அவர்களும் ஐயா செல்வன் அவர்களும் எனது நினைவிற்கு வந்தனர். அவர்களுக்காகவும் அந்தக் காளீசுவரிடமும் மன்னர்களிடமும் வேண்டிக் கொண்டேன்.








கானப்பேர் எயில் என்ற காளையார் கோயில், மருது சகோதர்களால் கட்டி முடிக்கப் பெற்ற 9 நிலை பெரிய கோபுரம், மற்றும் வரகுண பாண்டியனால் கட்டப்பெற்ற 5 நிலை கோபுரம்.




மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர்


(வழிபாட்டிற்கு உரிய மன்னரது சிலையைச் சுற்றிலும் குப்பை போடப்பட்டிருப்பதும், அவரது பெருமைகளை அம் மண்ணின் மைந்தர்கள் அவ்வளவாக உணராமல் இருப்பதும் மனதிற்கு வருத்தமாக இருக்கிறது)

மகா சிவபக்தனாகத் திகழ்ந்த சிவகங்கைசீமையின்இரண்டாவது மன்னர் மாவீர முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர். இவர் 1750 முதல் 1772 வரை இருபத்திரெண்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். இந்திய மண்ணில் இவரே வெள்ளையர்களை எதிர்த்து முதல் சுதந்திர முழக்கம் செய்தவர். காளையார் கோயில் கடும் போரில் வெள்ளையர்கள் மறைந்து நின்று கை எறி குண்டுகளை வீசியபோது 25/6/1772 இல் வீரமரணம் அடைந்தார்.

இவருடன் போரில் காளையார் கோயிலைச் சேர்ந்த இவரது இரண்டாவது மனைவி கன்னிராணி கௌரி நாச்சியாரும் உயிர் துறந்தார். இவரது அமைச்சர் தளவாய் தளவாய்தாண்டவராய பிள்ளை. தளபதிகள் மாவீரர்களான மருது பாண்டியசகோதரர்கள்.




பெரிய மருது








சின்ன மருது




- முனைவர் காளைராசன்

மறுமொழிகள்

0 comments to "காளையார் கோயில் - மருது சகோதரர்கள்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES