ஐப்பசி மாதக் காவிரி ஸ்நானம் மனிதர்களுக்கான நமக்கு மட்டுமல்ல, அரங்கத்து நம்பெருமாளுக்கும் விசேஷமானது; பிடித்தமானது. தினசரிக் குளியலுக்குக் கொள்ளிடத்து நீரைப் பயன்படுத்தும் நம்பெருமாள் இந்த ஐப்பசி மாதம் மட்டும் காவிரி நீரைப் பயன்படுத்துவார். அதுவும் ரங்கராஜனின் பட்டத்து யானையான ஆண்டாளம்மா மேல் பட்டாசாரியார் உட்கார்ந்து கொண்டு தங்கக் குடத்தில் அந்த நீரைக் கொண்டு போவார். இது இந்த மாசம் முழுதும் தினசரி நடக்கும் காட்சி. ஐந்து மணிக்கே ஆண்டாள் காவிரிக்குப் போய் விடுவாள். அதன் பின்னர் ஐந்தே முக்கால் போல் பட்டாசாரியார்கள் செல்வார்கள். நடந்து வருவதாலும், ஆண்டாளின் வேகத்தோடு ஈடு கொடுக்க முடியாததாலும் அவர்கள் வருகை மெதுவாகவே நடைபெறும். திரும்பறச்சே பார்க்கணுமே. ஆண்டாளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடுவார்கள். :)
முந்தாநாள் தற்செயலாக வீட்டுக்கு வந்த உறவினர்கள் திரும்ப ஊருக்குச் செல்லும்போது கீழே வந்தப்போ ஆண்டாளைப் பார்க்க நேர்ந்தது. அப்போக் கையில் அலைபேசியும் இல்லை. காமிராவும் இல்லை. ஆகவே படம் எடுக்கலை. நேத்திக்குப் போக நினைச்சு முடியலை. இன்னிக்கு முன் கூட்டியே காத்திருந்து போய்ப் பார்த்து எடுத்து வந்த படங்கள் இவை.
வெள்ளிக்குடத்தில் தாயாருக்கு நீர் போகிறதுனு நினைக்கிறேன்.
அதோ ஆண்டாளம்மா. அவங்க மேலே தங்கக்குடம் காவிரி நீருடன்
இன்னும் கொஞ்சம் அருகே ஆண்டாளம்மா வந்துட்டாங்க.
அந்த அவசரத்திலும் ஆண்டாளம்மா கடைக்கண்களால் நம்ம பக்கம் பார்த்து ஒரு புன்னகை ஒண்ணு கொடுக்கிறாங்க.
கோயிலை நோக்கி வேக நடை போடும் ஆண்டாளம்மா. முன்னர் பழகிய பாகன் ஶ்ரீதரன் இல்லாமல் அடிக்கடி அவங்களுக்கு ஏக்கத்தில் உடம்பு படுத்தினாலும் ரங்கனின் சேவையை நிறுத்துவதில்லை. அதோடு புதுப் பாகனிடமும் மிகவும் கீழ்ப்படிதலுடன் நடந்துக்கிறாங்க என்பது கூடுதல் விசேஷம்,
மறுமொழிகள்
0 comments to "ஆண்டாளம்மா அரங்கனுக்குக் கொண்டு செல்லும் காவிரி நீர்!"
Post a Comment