Sunday, October 12, 2014

விக்டோரியா மகாராணியும் கூர்க் மன்ன மகள் கவுரம்மாவும்

0 மறுமொழிகள்

தென்னாட்டு ராணியாகத் தன்னை உருவகப்படுத்திக்கொண்ட விக்டோரியா ராணியார்.


இந்தியாவின் ராணியாக முடிசூட்டிக்கொண்டாலும் தன்னை ஒரு தென்னாட்டு ராணியாகத் தன்னை உருவகப்படுத்திக்கொண்ட விக்டோரியா ராணியார் தமிழ்நாட்டின் திருவிதாங்கூர் தந்த அரியணையில் வீற்றிருக்கும் காட்சி.




விக்டோரியா ராணியார் இந்தியர் ஒருவரைத் தன் ஆசானாக அமர்த்திக்கொண்டு இந்திய மொழிகளைக் கற்று இந்தியாவிலிருந்து வந்த அரசர்களுடன் பேசியதாஞவும் அவர் திருக்குறள் பதிப்பைத் தன்னிடம் வைத்திருந்தார் என்ற குறிப்புள்ளது.



தமிழகத்தின் ஒரு பகுதியான கூர்கின் மன்னர் தன் சிறுவயது மகளுடன் லண்டன் சென்று விக்டோரியா ராணியைச் சந்தித்து தன் மகளுக்கு ஆங்கிலக் கல்வி கற்க ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகிறார்.  விக்டோரியா ராணியார் இளவரசி கவுரம்மாவை கிறித்துவராக அவரே முன் நின்று ஞானக் குளியலிட்டு விக்டோரியா கவுரம்மா என்ற பெயரிட்டு அவரே கவுரம்மாவின் இறைத்தாயாக இருந்து தன் அரண்மனையில் பாசத்துடன் வளர்க்கிறார்.


கவுரம்மாளை தலை சிறந்த ஓவியரைக்கொண்டு ஓவியமாக வரைந்து தன்னிடம் வைத்துக்கொண்டு அழகு பார்த்தார்.




கண்ணையும் கருத்தையும் கவரும் பளிங்ங்குச் சிலையாகசும் கவுரம்மா விக்ட்டிரியா ராணியின் விருப்பப்படி வடிவமைக்கப்பட்டது.




கூர்க் மன்னரின் மகளாகப் பிறந்த கவுரம்மா.


விக்டோரியா ராணியிண் வளர்ப்பில் வளர்ந்த கவுரம்மாவை பஞ்சாப் மன்னர் துலீப் சிங்குக்கு மணம் முடிக்க விருப்பப்பட்டார்.




விக்டோரியா ராணியின் திட்டம் நிறைவேறவில்லை எனினும் கவுரம்மாவுடன் கருத்துப்பரி மாற்றம் செய்ய விக்டோரியாவின் ஆசான் கரிம் உதவியிருப்பார்.


விக்டோரியாவின் ஆட்சி கிழக்கிந்தியக் கம்பனியின் முறை தவறிய அரசாண்மையை நீக்கி இந்தியர்கள் புத்துலகச் சிற்பிகளாக மாறவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார்.  தென்னாட்டு இளவரசியின்பால் மட்டற்ற பற்றுக்கொண்டு தென்னாட்டு ராணியாக வாந்தார் விக்டீரியா ராணியார்.  கடல் கடந்து பெண்கள் தென்னாட்டிலிருந்து சென்ற தகவல் பெருமைக்குறியதாகும்.

பேராசிரியர்.நாகராசன்

மறுமொழிகள்

0 comments to "விக்டோரியா மகாராணியும் கூர்க் மன்ன மகள் கவுரம்மாவும்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES