சீதையைப் போன்ற பிரதிமையைச் செய்து அருகே இருக்கும் கோலத்தில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள். இந்தச் சிற்பம் சீதை பாதாளத்தில் பிரவேசித்ததாய்ச் சொல்லப்படும் பள்ளத்துக்குப் பின்னால் உள்ள ஒரு தூணில் செய்துக்கப்பட்டுள்ளது. அனைவரும் சீதை பூமியில் மறைவதைப் பார்த்த வண்ணம் இருப்பதாய்ச் செதுக்கி இருக்கிறார்கள்.
சிற்பம் செதுக்கி இருக்கும் தூண்
வால்மீகி ஆசிரமத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ள கங்கைக்கரை கீழே. இங்கே பிரம்மா வந்து கால் பதித்ததுக்கு அடையாளமாக மரத்தால் ஆன பாதுகைகள் இருக்கின்றன. அதை ஒரு தனிக் குண்டத்தில் கங்கைக்கரையிலேயே சந்நிதி போல் கட்டி வைத்திருக்கின்றனர். இங்கே வந்து கங்கைக்கரையில் குளித்துவிட்டு பிரம்மாவுக்கு வழிபாடு செய்வதை மிகவும் விசேஷமாகச் சொல்கின்றனர்.
கங்கையின் ஒரு தோற்றம்
இன்னொரு தோற்றம்
கீழே ரிஷபம் இருக்கிறது தெரியுதா? இடப்பக்கம் அம்பிகை
மற்றும் சில வடிவங்கள்
பிரம்மாவின் பாதச் சுவடுகள், ஒரு படிக்கட்டில் இது இருக்கிறது. இந்தப்படிக்கட்டு கங்கை ஓடிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து முப்பது, நாற்பது படிகள் மேலே உள்ளது, வெள்ளக் காலத்தில் கங்கை இதை முழுக அடித்துவிடுவாள் என்கிறார்கள்.
இன்னொரு தோற்றம். இங்கேயும் பண்டிட்கள் வசூல் மன்னர்களாக இருக்கின்றனர்.
இது தான் துருவன் சந்நிதி என நினைக்கிறேன். அங்கே வழிகாட்டி கிடைக்கலை. ஆனால் இதுவாத் தான் இருக்கணும்.
மறுமொழிகள்
0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் -- பிட்டூர் கங்கைக்கரையில்"
Post a Comment