Monday, December 2, 2013

ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரகூடம்--குப்த கோதாவரி 2

0 மறுமொழிகள்

இரண்டாவது குகைக்குச் செல்லும் வழி.  இந்தப் படியில் கீழே இறங்கி நெளிந்து வளைந்து செல்லும் குறுகலான வழியில் செல்ல வேண்டும்.  தண்ணீர் நிறைய ஓடுகிறது.  எங்கிருந்து வருகிறது எனச் சொல்ல முடியலை.  அனுமான் தாராவின் நீர்வீழ்ச்சியிலிருந்து வருவதாகவும் சொல்கின்றனர்.  ஶ்ரீராமரும், சீதையும் இங்கே தான் குளியல், துணிகளைத் துவைத்தல் போன்றவற்றைச் செய்திருக்கலாம் எனக் கூறியதாகவும் சொல்லுகின்றனர்.



தண்ணீர் பல இடங்களில் முழங்காலுக்கும் மேல் ஓடுகிறது.  கீழே எல்லாம் பாறைகள். பாறைகளின் கூர் முனைகள்.  பள்ளம்னு காலை வைச்சால் மேடாகவும், மேடுனு காலை வைச்சால் பள்ளமாகவும் இருக்கும்.  இங்கே உள்ளே சென்றால் ஶ்ரீராமர், சீதை, லக்ஷ்மணன், அனுமனோடு அரை அடிக்கு உயரமுள்ள சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்.  இரண்டு பண்டிட்கள் அங்கே அமர்ந்து கொண்டு வழிபாட்டை நடத்தித் தருகின்றனர்.


இவங்க காலை ஏழு மணிக்கே சென்றதால் கூட்டம் இல்லைனு சொல்றாங்க.  நாங்க செல்கையில் நல்ல கூட்டம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் இரு குகைகளையும் பார்த்து முடிக்க ஆனது. 

மறுமொழிகள்

0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரகூடம்--குப்த கோதாவரி 2"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES