இந்த குப்தகோதாவரி என்னுமிடத்தில் தான் உள்ளே உள்ள குறுகிய வழி கொண்ட குகையில் ஶ்ரீராமர், லக்ஷ்மணன், சீதை ஆகியோருடன் பதினோரு வருடங்கள் இருந்ததாய்ச் சொல்கின்றனர். இங்கே இரு குகைகள் உள்ளன. இரண்டிற்கும் செல்லும் பாதை குறுகி இருந்தாலும் முதல் குகையில் உள்ளே சென்றதும் விசாலமான மேடையுடன் கூடியதொரு மண்டபம் உள்ளது. அங்கே ஶ்ரீராமர் சந்நிதி உள்ளது. புகைப்படம் எடுக்கையில் தடுத்துவிட்டனர். மேலும்கூட்ட நெரிசல் வேறு. முடிந்த வரை எடுத்தேன்.
இந்தக் குறுகிய வழியைக் கடந்து வந்தால் கொஞ்சம் விசாலமான மண்டபம் வரும்.
ஒருவரே சிரமத்தோடு செல்லும் வழியில் ஒருவர் குகைக்குள் வர, இன்னொருத்தர் அவசரமாய் வெளியேற முற்படும் காட்சி.
குகையின் மேற்பரப்பில் காணப்பட்ட அபூர்வமான சித்திர விசித்திரமானவை. இதைப் படம் எடுக்கையில் தான் தடுக்கப்பட்டேன். :( இவை அனைத்தும் முதல்குகைப் படங்கள். இரண்டாம் குகைப்படங்கள் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அனுப்பியுள்ளார். அவர் அநுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மறுமொழிகள்
0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் ---சித்திரகூடம்--குப்த கோதாவரி 1"
Post a Comment