நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி ‘ இழையில் , எம்.ஆர். ராதா நடித்த ராமாயணம் / கீமாயணம் பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது. அந்த நாடகம் திருவாரூர் தங்கராசு அவர்கள் எழுதிய நாடகம். இவர் எழுதிய ராமாயணம் பகுத்தறிவுப் புத்தகம், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. அதையே அவர் நாடகமாக எழுதினார். இராவணனை நாயகனாகக் கொண்ட அந்த நாடகம் கீமாயணம் என்றும் அழைக்கப்பட்டது. பல ஊர்களில் அரங்கேற்றப்பட்டது. திருச்சியில் எம்.ஆர். ராதா அவர்கள் பலமுறை அரங்கேற்றியிருக்கிறார்.
இந்த நாடகத்தை கடலூர் திராவிட கழகத்தினர் என் பெரியப்பா கே.எம். வேலு தலைமையில் அரங்கேற்றினர். என் பெரியப்பாதான் இராவணன் வேடமேற்று நடித்து புகழ் பெற்றார். நான் அப்போது குழந்தை, காட்சிகள் எதுவும் நினைவில்லை. ஆனால், நாடகத்தின் முதற்காட்சியில் கம்பீரமாகத் தோன்றும் இராவணன் பேசும் வசனம் (என் அப்பா சொல்லக் கேட்டு ) எனக்குத் தெரியும். அதை கீழே தருகிறேன்.
“சிங்கத்தின் குகையிலே சிறு நரிகள்
செந்தாமரை ஓடையிலே முதலைகள்
தமிழகத்திலே ஆரியர்கள்.................
ஆடு மாடு மேய்க்க வந்த ஆரியர் கூட்டம்
இன்று நாடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
இதை இப்படியே விட்டு விட்டால்
நாடு மோசக்காரர்களின் வேட்டைக்காடு ஆகிவிடும்.
இதை ஒழிக்கத் திட்டம் தேவை .......”
என்பதே. தங்கராசு அவர்களின் எழுத்துக்கு இது ஓர் எடுத்துக் காட்டு.
திருவாரூர் தங்கராசு சுயமரியாதைக்காரர். நல்ல எழுத்தாளர்.சிறந்த பேச்சாளர். பெரியாரின் தொண்டர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். பெரியாருக்கு அடுத்தபடி , தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் பேசி கருத்துகளைப் பரப்பும் திறம் படைத்தவர். நான் ஒரே ஒரு முறைதான் இவரது உரையைக் கேட்டிருக்கிறேன்.
இரத்தக் கண்ணீர் நாடகம் இவர் எழுதியதே. பின்னர் திரைப்படமான இரத்தக் கண்ணீர் நாடகத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதியவரும் இவரே. இறுதிவரை கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்த இவர் , கடந்த 2014ஆம் ஆண்டு , தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார்.
-சிங்காநெஞ்சன்
மறுமொழிகள்
2 comments to "இராமாயணம் / கீமாயணம்"
July 18, 2020 at 6:36 AM
அவன் திமிரின் வடிவம். அவன் பையன் புகழேந்தி ஊழலின் மொத்த வடிவம். பொறுக்கி.
August 14, 2024 at 4:42 AM
தாசி மகன் வேசி துணையாளோடு வார்த்தையால் வீசி சென்றவன்
Post a Comment