அண்மையில் பிட் நோட்டீஸ் ஒன்று பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்தது. அதன் வாசகம் பின்வருமாறு:
உசிலம்பட்டி கெளடர் டூரிங் டாக்கீஸில்
11-8-37 புதன்கிழமை முதல்
மிஸ் K.T. ருக்மணி ராம்பியாரி அங்கமுத்து
முதலியோர் நடித்த
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி
அல்லது
நவராத்திரியின் மகிமை
என்னும் தமிழ் பேசும்படும் படம் கண்பிக்கப்படும்
(எழுத்துப் பிழைகள் என்னுடையதல்ல. படம் பார்க்கவும்)
கனதனவான்கள் அனைவரும் தவராது பார்த்து
ஆனந்தமடையும்படி கேட்டுக் கொள்கிறேம்.
டிக்கட் விபரம்
சேர் 0-4-0 காலரி 0-2-0 தரை 0-1-0
(அணா 4 அணா 25 பைசாவுக்கு இணை)
R.V.G. Proprietor. K.S.V. Manager
_______________________________________________
மதுரைவீரன் பிரஸ், உசிலம்பட்டி: -- 37.(37 தொலைபேசி எண்)
இதன் முன்புறத்தில் வண்ணத்தில் நடிகை படத்துடன் காணப்பட்ட வாசகங்கள். இதில் குறிப்பிடப்படும் "றம்பியார்" நம் எம்.என். நம்பியார் அவர்களா என்று தெரியவில்லை.
சந்திரா பிக்சர்ஸ் தயாரித்தது. டைரக்டர் துருபத்றாய் என்றுள்ளது.
படங்களுக்கான ரீல்களை அனுப்புகையில், வண்ணத்தில் அடிக்கப்பட்ட நோட்டீஸ்களும் கட்டணம் செலுத்தி பெறப்படும். உள்ளே உள்ள வெள்ளை வெற்றிடத்தில், அந்த அந்த தியேட்டர் குறித்து அடித்து விநியோகம் செய்வார்கள் என்று இந்த நோட்டீஸைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என் சிறிய தந்தை கூறினார்.
கூகுளில் இது குறித்துத் தேடியபோது முழுமையானப் பதிவாக இல்லாமல், திரைப்பட தலைப்பு மட்டும் இருந்தது. வேறு தகவல்கள் இல்லை.
பெ.சந்திர போஸ்
சென்னை
------------------------------------------------------------------
///இதில் குறிப்பிடப்படும் "றம்பியார்" நம் எம்.என். நம்பியார் அவர்களா என்று தெரியவில்லை. ///
ராம்பியாரி என்பவர்தான் அந்த அம்மையார்.
அக்கால நடிகை எனத் தெரிகிறது.
_________________________________
படம் குறித்த தேடலில் எனக்குக் கிடைத்த செய்தி (http://www.gomolo.com/samundeeswari-movie/8696)
Samundeeswari (1937 - Tamil)
About Samundeeswari
Director: Drupad Roy
Main Cast:
M. S. Raghavan, K. T. Rukmini, A. Kodandapani, Rampyari...
Release:
1937
Source:
https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/The-making-of-lsquoMenaka/article16146081.ece
Rashid Ashraf
https://www.flickr.com/photos/rashid_ashraf/42062981362
Rampyari (Actress of 20s & 30s)
முனைவர் தேமொழி.
-----------------------------------------------------------------------------------------------------------------
அன்றைய காலத்திய திரைப்படங்களில் நாயகிகள் எவ்வாறு சித்தரிக்கபப்ட்டார்கள் என்று காட்டுகிறது. இதோ நீங்கள் குறிப்பிடும் படம் .
பெ.சந்திர போஸ்
சென்னை
மறுமொழிகள்
0 comments to "பிட் நோட்டீஸ்"
Post a Comment