காரைக்குடி, குன்றக்குடி, பிள்ளையார்பட்டி, தேவகோட்டை என சிவகங்கை மாவட்டத்து நகர்களைச் சுற்றி வந்தபோது என் மனதைக் கவர்ந்த ஒரு விஷயமாக அமைந்தது சில கோயில் மண்டபங்களிலும் தனி மண்டபங்களில் பல வர்ணக் கலவைகளில் விதம் விதமாக தீட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள சுவர் சித்திரங்கள்.
குன்றக்குடி குடவரைக் கோயில் எதிர்புறத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் வெளி வாசல்புறத்தில் ஒரு மண்டபம் இருக்கின்றது. அந்த மண்டபத்தின் சுவர்களில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் வடிவத்தவை.
சித்திரங்கள் சற்று பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றன. இம்மண்டபம் சீரமைக்கப்பட்டு இச்சித்திரங்கள் சரியான பாரம்பரிய முறையில் பாதுக்கக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மரபு அறக்கட்டளையின் விருப்பமாகும்.
இம்மண்டபத்தை அலங்கரிக்கும் சித்திரங்களின் சில படங்கள்:

அன்புடன்
சுபா
மறுமொழிகள்
0 comments to "காரைக்குடி மண்டப சித்திரங்கள்"
Post a Comment