தர்மபுரிஇலிருந்து கடலூர் வரை கெடிலக்கரை என இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெண்ணை ஆற்றின் கரைகளில் ஏராளமான நடுகற்கள் உள்ளன. குறிப்பாக திருவண்ணாமலையில் செங்கம், தானிபாடி, தண்டராம்பட்டு, ஆகிய பகுதிகளில் மிகப்பழமை வாய்ந்த நடுகற்கள் அதிக அளவில் உள்ளன. ஆநிரை கவர்தல், மீட்டல், பெண்களை கவர்தல், மீட்டல் ஆகிய காரணங்களுக்காக நடை பெற்ற போர்களில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு இந்த நடுகற்கள் வைக்கப்பட்டு உள்ளன. பொதுவாக வேடியப்பன் காவு என குறிப்பிடபடும் இந்த நடுகற்கள் சிறு தெய்வமாக கொண்டாடப்படுகிறது. சில பகுதிகளில் முனீஸ்வரன், சுடலை மாடன், ஐயனார், வேடிச்சி, என வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. தண்டராம்பட்டு அருகே எடத்தனூர் என்ற கிராமத்தில் தன் எஜமானனுடன் சேர்ந்து போரிட்டு இறந்த கொவிவன் என்ற நாய் உருவத்தையும் கருந்தேகியதி என்ற அந்த வீரனுடன் சேர்த்து உருவம் பதிக்கப்பட்ட நாடுகள் உள்ளது. இதே போல புலி குத்தி பட்டான், பன்றி குத்தி பட்டான், முயல் குத்தி பட்டான் என வேட்டையாடும்போது இறந்த வர்களுக்கும் நடுகற்கள் உள்ளன. 

ஆண்கள் போரில் தோற்று இறக்கும் போது பெண்களே முன் வந்து போரிட்ட குறிப்புகளும் அப்படி இறந்தவர்களுக்கு வேடிச்சி என்ற பெயரில் நடுகற்கள் உள்ளன. அதேபோல கணவன் இறந்த பிறகு உடன் கட்டை ஏறிய மனைவிகளுக்கு வைக்கப்பட்ட நடுகற்கள் தீப்பாஞ்சாள் எனப்படுகிறது. பெண்களின் நடுகற்கள் பெண்ணை ஆற்றின் கீழ் கரையிலும், ஆண்களுக்கான நடுகற்கள் மேல் கரையிலும் உள்ளன.


Saturday, July 23, 2011
பெண்ணை ஆற்றங்கரை நடுகற்கள்
Subscribe to:
Post Comments (Atom)
மறுமொழிகள்
0 comments to "பெண்ணை ஆற்றங்கரை நடுகற்கள்"
Post a Comment