Sunday, December 8, 2013

ஶ்ரீராமனின் பாதையில் ----வால்மீகி ஆசிரமம், பிட்டூர்

0 மறுமொழிகள்





ஆசிரமம் குறித்த அறிவிப்புப் பலகை ஆசிரம வாயிலில் அதில் உள்ள வாசகங்கள்

புராதன காலத்தில் ப்ரஹ்மவர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த ஊரில் தான் மஹரிஷி வால்மிகி அவர்கள் ராமாயண மஹாகாவ்யத்தை எழுதினதாகச் சொல்லப்படுகிறது.  அவருடைய ஆசிரமும் இங்கேயே அமைந்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.  மேலும் ஶ்ரீராமனால் கைவிடப்பட்ட அவருடைய பத்தினி சீதா தேவிக்கு வால்மீகி இங்கே தான் அடைக்கலம் கொடுத்தார்.  சீதையின் இரு புத்திரர்களான லவனுக்கும், குசனுக்கும் இங்கே தான் வித்யாரம்பம் நடந்ததோடு இங்கேயே அனைத்துக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தனர்.  அவர்கள் இருவரும் இந்த க்ஷேத்திரத்தில் தான் ஶ்ரீராமனுடைய அஷ்வமேத யாகக் குதிரையைப் பிடித்து அடக்கினார்கள்.  இங்கே தான் மஹரிஷி வால்மீகியின் மூலம் தந்தை மற்றும் புத்திரர்களுடைய முதல் சந்திப்பு நடந்தது.

இங்கே இருக்கும் வால்மீகி கோயிலின் ஜீர்ணோத்தாரணம் பேஷ்வா பாஜிராவ் 2 மூலமாக  19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நடைபெற்றது.  கோயிலின் கர்பகிருஹத்தில் கறுப்புக் கல்லால் ஆன ஒரு சிவலிங்கமும்  மத்தியகாலத்தைச் சேர்ந்த ஹரிஹரனின் பிரதிமையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  பேஷ்வா காலத்தில் அமைகப்பட்ட இங்குள்ள தீபஸ்தம்பமும்  காண்பதற்கு அரிய ஒன்று.

உத்தரப்பிரதேச மாநில  தொல்பொருள் துறை, லக்னோ






லவ, குசர்கள் இங்கே பிறந்ததால் இதை லவ,குச ஜன்மபூமி என்றும் சொல்கின்றனர்.  லவ, குசர்களுக்கு சந்நிதியும் உள்ளது.



மேலுள்ள வாயிலைக் கடந்து ஒரு சிறிய தோட்டத்தையும் கடந்தால் வரும் இந்தப் படிகளின் மேல் ஏறிஆசிரமத்தை அடைய வேண்டும். முற்றிலும் அமைதியான இடம்.  மனதுக்குள் ஒரு நிம்மதியும், புத்துணர்வும் ஏற்படுகிறது.



ஆசிரமத்தின் உள்ளே உள்ள அறிவிப்புப் பலகை. 

ஆசிரமத்தின் உள்ளே உள்ள மேற்கண்ட அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்.

ஶ்ரீராமசந்திர மூர்த்தியின் ஆக்ஞையின்படி ஶ்ரீலக்ஷ்மணன் சீதையை இங்கே தான் விட்டுச் சென்றான். இந்த ஆசிரமத்தின் உள்ளே தான் சீதா மாதாவின் குடிசை இருந்தது.  இங்கே தான் லவனும், குசனும் பிறந்தனர். ஶ்ரீராமரின் அஷ்வமேத யக்ஞத்திற்காக விடப்பட்ட அஷ்வக் குதிரையை இந்த க்ஷேத்திரத்தில் தான் லவனும், குசனும் பிடித்து வைத்தனர்.  இங்கே தான் சீதை அருகே இருக்கையிலேயே ஹநுமானை லவனும் குசனும் பிடித்துக் கட்டிப் போட்டு ஆசிரமத்துக்குள் கொண்டு வந்தனர்.  உள்ளே உள்ள கோயிலில் சீதாதேவி, லவன், குசன், மேலும் புராதனமான தக்ஷிணமுக ஆஞ்சநேயரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

புராதன சித்த பீடம், ஜீர்ணோத்தாரணம் ஆன வருடம் 1999 ஆம் ஆண்டு.


மறுமொழிகள்

0 comments to "ஶ்ரீராமனின் பாதையில் ----வால்மீகி ஆசிரமம், பிட்டூர்"

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES