Tuesday, April 20, 2010

களக்காடு சத்யவாகீஸ்வரர் கோவில்

3 மறுமொழிகள்



களக்காடு சத்யவாகீஸ்வரர் கோவில் கோபுரத்துள் புராதனமான ஓவியங்கள் மற்றும் அழகான மர சிற்பங்களும் (காண்க மேலுள்ள படம்) உள்ளன என்பதை எங்கள் ரீச் ப்ஃவுண்டேஷன் சென்று, கோவில் புனரமைப்புப் பணிகளை செய்யும் போது கண்டெடுத்து ஹிந்து பத்திரிகையிலும், மேலும் பல அரசு நிறுவனங்கள் (இந்து அற நிலையத் துறை, சுற்றுலா துறை) ஆகியோருக்கும் தெரிவித்தோம்.

இவற்றை பாதுகாக்க எந்த விதமான நடவடிக்கையும் அரசு சார்பாக எடுக்கவில்லை. கொடுமை என்னவென்றால் புகைப்படங்களில் காண்பது போல் கீரைக் கடைக்கு எதிர் கடை என்று ஜெயலலிதா அவர்களின் கல்வெட்டின் எதிரேயே கலைஞரின் கல்வெட்டு பதிக்கப்பட்டு , அதுவும் கலைஞரே அரசர் ரேஞ்சுக்கு ஏதோ கோவிலையே எழுப்புவது போல் துதிபாடிகள் கல்வெட்டு பதித்தது நம் இறையாண்மையை கேலிக்கூத்தாக்கிவிடுகிறது.

கோவில் புனரமைப்பும் பணப் பற்றாக்குறையினால் மெதுவாகவே நடைபெற்று வருகிறது.

அரசியலைப் புறந்தள்ளிவிட்டு, மற்ற புகைப்படங்களைப் பார்ப்போம்.

சந்திரா

மறுமொழிகள்

3 comments to "களக்காடு சத்யவாகீஸ்வரர் கோவில்"

பார்வைகள் said...
April 28, 2010 at 9:09 PM

இப்பகுதியில் உள்ள பின்வரும் பிழைகளை நீக்க வேண்டுகிறேன்.
1. பதிவுககள் - பதிவுகள்
2.அரச்ர் - அரசர்
3.புரந்தள்ளி - புறந்தள்ளி
4.கூத்து பட்டறை - கூத்துப்பட்டறை
நன்றி.
தமிழன்புடன்,
முனைவர் தி.நெ.
மயிலாடுதுறை.

Unknown said...
July 3, 2010 at 11:41 AM

கோவிலைப் பராமரிக்கணுமா.. என்ன கேக்கறீங்க,, இன்னும் இந்தியாவில மக்களை கோவிலுக்குப் போக அனுமதிக்கறாங்களே அதுவும் இந்த ‘பகுத்தறிவுப் பகலவனோட’ ஆட்சியில..அதுக்கே இந்த ‘திருடர்கள்’,அதாங்க ‘இந்துக்கள்’, தனியா வரிசெலுத்தணும்,இதில கோவிலைப் பராமரிக்கணுமா... மதச்சார்பற்ற இந்திய நாட்டில இப்படியெல்லாம் கேக்கற அளவுக்கு தைரியம் வளர்ந்துடுச்சி..கலிகாலம்தான்..அதான்இப்போ ‘பகுத்தறிவுப் பகலவனுக்கு’ கோவில் கட்டறாங்க இல்லை.. அதைத்தான் பராமரிப்பாங்க...http://timesofindia.indiatimes.com/city/chennai/Temple-to-honour-Tamil-Nadu-CM-M-Karunanidhi/articleshow/6118949.cms

Maraboor J Chandrasekaran said...
August 2, 2011 at 12:58 AM

Kalakkad temple Kumbhabhishegam happened recently. Thank God

 

Copyright 2008 Tamil Heritage Foundation. All Rights Reserved. Designed by LIMATION TECHNOLOGIES